Scroll

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 25 டிசம்பர், 2019

நீங்கள் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடியை அறியுங்கள் - இந்த இணைப்பில்

நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்பட்டுள்ளீர்கள் என்று இந்த இணைப்பின் மூலம் அறியலாம்

https://tnsec.tn.nic.in/sl/ppps.html

செவ்வாய், 24 டிசம்பர், 2019

வாக்களிப்பது எவ்வாறு காணொலிக்காட்சி விளக்கம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது என விளக்கும் விதமாக தமிழக தேர்தல் ஆணையம் காணொலிக்காட்சியை வெளியிட்டுள்ளது.


ஞாயிறு, 22 டிசம்பர், 2019

பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பான வரையறைகள்

சாதாரண உள்ளாட்சித் தேர்தல்-2019

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாக பின்வரும் வரையறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • தமிழ்நாடு திறந்தவெளிகள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டம் 1959 இல் பார்வையில்படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் / கட்டிடம் அடங்கும். 
  • இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. 
  • ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஒலிபெருக்கிகள் பயன்பாடு - தேர்தல் நடத்தை விதிமுறைகள்


உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
  • தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி, தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.
  • யாதொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும்.
  • மேலும் ஒலிபெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மேற்சொன்னவாறு வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும், அதனைப் பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும் எனவும், மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
    https://tnsec.tn.nic.in/tnsec_upload/Press%20Release/PR-0030-2019.pdf


உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பறக்கும்படை அமைப்பு


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பறக்கும்படை அமைப்பு

27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாமல் நடைபெறவுள்ள தேர்தல்களில், மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க உறுதி செய்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
மேலும், பதட்டம் நிறைந்த மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கவும், அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோ ஒளிப்பதிவு மற்றும் இணையதளம் மூலம் மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணித்து பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு மூன்று பறக்கும்படை வீதம் முதன்மை பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, பறக்கும் படை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும்.
என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பொது மக்கள் புகார் மையம் மூலம் புகார் தெரிவித்தல் - கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சாதாரண உள்ளாட்சித் தேர்தல்-2019 பொது மக்கள் புகார் மையம் மூலம் புகார் தெரிவித்தல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2019-சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், நடைமுறையில் உள்ள ‘மாதிரி நன்னடத்தை விதிகள்' தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கையினை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து புகார்களை பெறுவதற்கு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத் தளத்தில் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் “புகார் மையம்” அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
1800 425 7072
1800 425 7073
1800 425 7074
மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.