சாதாரண உள்ளாட்சித் தேர்தல்-2019 பொது மக்கள் புகார் மையம் மூலம் புகார் தெரிவித்தல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2019-சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், நடைமுறையில் உள்ள ‘மாதிரி நன்னடத்தை விதிகள்' தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையினை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து புகார்களை பெறுவதற்கு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத் தளத்தில் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் “புகார் மையம்” அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள
கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
1800 425 7072
1800 425 7073
1800 425 7074
மேற்கண்ட கட்டணமில்லா
தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள்
தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.